டெல்லி:
மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுக எம்.பி. தம்பிதுரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே,, கேசி வேணுகோபால் மற்றும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா உள்பட 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் போட்டியிட்டவர்களில் 42 பேர்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் முன்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், தேர்தல் தேதி ஜூன் 19ந்தேதி என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நேற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட 42 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஒருவரான கேசி வேணுகோபால் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை  ஆகியோர் முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புவனேஷ்வர் கலிதா, பிரேம் சந்த் குப்தா ஆகியோர் 5-ஆவது முறையாகவும், திமுகவைச் சேர்ந்த  திருச்சி சிவா, கேசவ் ராவ், பிஸ்வஜீத் டைமாரி, பரிமல் நத்வானி ஆகியோர் 4-ஆவது முறையாகவும் தேர்வாகி உள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜி.கே.வாசன், தினேஷ் திரிவேதி, நபம் ரபியா ஆகியோர் 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ்கட்சித் தலைவர் சரத் பவார்,  திக்விஜய் சிங், தேவே கவுடா, சிபு சோரன்  உள்ளிட்டோர் 2-ஆவது முறையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.