சென்னை:
மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 3வது வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், ஒருவேளை அவரது மனு நிராகரிக்கப்பட்டால், வைகோவுக்கு பதிலாக, திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ தேர்வு செய்யப்படும் வகையில், அவர் இன்று மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும், திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியான மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக வேட்பாளர்கள் வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம் ஆகியோர் சட்டப்பேரவை செயலாளரிடம் தங்களது வேட்புமனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று, 2வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்யசபா தேர்தலுக்கு திமுகவில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், திமுகவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை வைகோவின் மனு நிராகரிக்கப்பட்டால் நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கையாக திமுக சார்பில் 3வது வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.