சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், அந்த வகையில் மொத்தம் 18 தமிழக உறுப்பினர்கள் ராஜ்யசபாவை அலங்கரிப்பார்கள். இவர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ந்தேதியுடன் முடிவடைய நிலையில், அந்த இடங்களுக்காக தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியுட்டது. அதன்படி ஜூன் 2 முதல் ஜுன் 9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், 10ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 12ம் தேதி வரை வாபஸ் வாங்கலாம். ஜுன் 19ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்கும் நிலை உள்ளது.
அதன்படி, திமுகவில் மீண்டும் வில்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியான மநீம தலைவர் கமல்ஹாசனக்கும் வாய்ப்பு வழங்கடப்பட்டுளள்து.
அதிமுக சார்பில், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்குமாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் எதிர்ப்புகள் இன்றி வெற்றிபெறுவது உறுதியாக உள்ளது. ஒருவேளை இவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்தால், தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது