புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ளது. புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக பாஜகவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துளளது.

புதுச்சேரியில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக கூட்டணி சார்பில், கடும் இழுபறிக்கு பின்னர் பாஜக உறுப்பினர் செல்வகணபதி வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பிலோ, காங்கிரஸ் கூட்டணி சார்பிலோ யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வகணபதியின் வெற்றி உறுதியாகி உள்ளது.
முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றது. என். ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றது.ஆனால், அங்கு மத்தியஅரசு சார்பில் 3 எம்எல்ஏக்கள் நியமனம் செய்யலாம் என்பதால், அந்த இடங்களுக்கு பாஜகவினர் நியமிக்கப்பட்டனர். இதனால், பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது. இதனால், என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பதவிகள் கேட்டு அடாவடி செய்தது. இதையடுத்து, மாநில பாஜகவுக்கு சட்டப்பேரவை தலைவர், 2 அமைச்சர்கள், நாடாளுமன்ற செயலாளர் ஆகிய பதவிகளை முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி ஒதுக்கினர்.
இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினருக்கும் கோதாவில் இறங்கியது. அதில் வெற்றியும் பெற்றது இதையடுத்து புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி, எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் பாஜகவை சேர்ந்த யாரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில், முதன்முறையாக பாஜக நபர், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]