தளபதி விஜயின் (Thalapathy Vijay) 65 வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து

விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளதாகவும், தில்ராஜ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் இப்படத்தின் தமிழ் மொழி வசனங்கள் எழுத இயக்குனர் ராஜுமுருகன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் இந்த படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் விஜய்.

2016ஆம் ஆண்டு வம்சி இயக்கிய தோழா படத்தின் தமிழ் வெர்சன் னுக்கு ராஜுமுருகன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.