ங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீடு வரும் 26ம் தேதி மாலை துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  இசை நிகழ்ச்சிடன் நடைபெற இருக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கு பெறுவர்களுக்கான பல  லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 12 ஆயிரம் டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி  நடித்துள்ள இந்த படத்தில் இசை நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் ரசிகர்கள் பார்க்கும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக துபாய் அரசு முதன்முறையாக அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவுக்கு வரும் பிரபலங்களை  7ஸ்டார்  ஓட்டலான  உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் அல்அரப்  ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்,ஓட்டலில் இருந்து பிரபலங்கள் ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு உலகம் முழுவதும் இருந்து ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், நடிகர் கமலஹாசனுடன் மேலும் பல இந்திய சினிமா  பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]