புதுடில்லி :
ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

மனுவில், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு கைதிகள் விடுதலை தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ராஜீவ் கொலை விசாரணை சிபிஐ கையாண்டதால், கொலையாளிகள் விடுதலை செய்வது பற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க முடியம் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel