புதுடெல்லி:
எஸ் தீவிரவாதிகள் பற்றிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதில் அளித்தார்.
is teerrr
பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், இந்தியா முழுவதும் இதுவரை 54 ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐஎஸ்  தீவிரவாதிகள்  மீது தேசிய புலனாய்வு முகமையும், மாநில போலீசாரும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், காஷ்மீரில், சில இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கக் கொடியை ஏற்றிய சம்பவங்கள் தொடர்பாக, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில அரசை வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.