ராஜிவ் காந்தி போல் உண்மையை ஒத்துக்கொள்வாரா மோடி?- மணிஷங்கர் ஐயர்

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

MODI DEGREE 1திரென் பகத் ராஜிவ் காந்தியிடம் பேட்டி காண்கையில்  “கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தாங்கள் என்ன மாதிரியான பட்டம் பெற்றீர்கள்” என்று கேட்ட போது , ” தோல்வி” எனும் பட்டம் பெற்றேன் என்று உண்மையை நேருக்கு நேராக கூறினார்.

என்ன சொல்ல வருகின்றேன் என்றால், “ஒரு பிரதமர் ஒரு பட்டதாரியாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. எது முக்கியம் என்றால், நேர்மையாய், உண்மையாய் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

இந்திரா காந்தியும் சாந்தி நிகெடனில் படித்திருந்தாலும் ஆக்ஸ்போர்ட் படிப்பை முடிக்க வில்லை.
ஜவகர்கலால் நேருவும் அதேபோன்று தான் தன் குறைந்தக் கல்வியை வைத்து ஆட்சி செய்தார்.
லால் பகதூரின் பின்னால் உள்ள சாஸ்திரி என்பது அவர் படித்து வாங்கிய பட்டம், ஜாதி அல்ல.
பி.வி.நரசிம்ம ராவ் நங்கு படித்தவர் . அவர் 18 மொழி பேசக்கூடியவர் என்பது தான் அவரது அடையாளம். தேவ கௌடா , சந்திர சேகர்  படிப்பு குறித்து பேசாமல் இருப்பதே நல்லது.
மொரார்ஜ் தேசாய், ஐ.கே.குஜரால் போன்றோரும் பெரிதாய் படிக்கவில்லை. மன்மோகன் சிங் மட்டும் தான் நமக்கு கிடைத்த படித்த முதல்வர்.

எனவே, “பிரதமர் ஐ.ஏ.எஸ். படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்தத் பரிட்சையிலும் தேர்ச்சி பெற்றிருக்கவும்  தேவையில்லை”. ஒருவர் படிப்பிற்கும் அவரது நிர்வாகத் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எனினும், நரேந்திர மோடியிடம் மிகவும் எளிய கேள்வியே முன்வைக்கப்பட்டுள்ளது.  நீங்கள் பட்டம் பெற்றவரா ? ஆம் எனில் எப்பொழுது, எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றீர்கள் ? பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளீர்களா ? அதாவது தங்களின் லட்சியத்தை அடைய பல்கலைக்கழகம் தேவியில்லை என்பதை உணர்ந்திருந்தீர்களா?

இவரது பட்டங்களை பற்றிய சர்ச்சையை இவர், தன் சான்றிதழ்களை வெளியிட்டோ, நான் கல்லூரிக்கே சென்றதில்லை எனக் கூறி அனைவரின் வாயையும் அடைத்திருக்கலாம்.

குஜராத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜெயந்தி பட்டேல் 1969 முதல் 1993 வரை அரசியல் துறையில் பணி புரிந்த காலத்தில் தான் மோடி படித்ததாக கூறப்படும் காலம் வருகின்றது.
தான் மோடிக்கு ஆசிரியராய் இருந்ததாகவும் , மோடி வகுப்பிற்கு ஒழுங்காய் வந்ததில்லை எனக் கூறியுள்ளார். இதன் மூலம் மோடி படித்திருக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.  இப்படி இருக்கையில், ஒரு எளிய கேள்விக்கு பிரதமர் அலுவலகம் நேரிடையான பதிலை  தெரிவிக்காததன் மூலம், தேவை இல்லாத சர்ச்சைக்கு வித்திட்டு உள்ளது. ராஜிவ் காந்தி போன்று , ” தோல்வி”ப் பட்டம் பெற்றேன் என்று தைரியமாக கூறுவாரா பிரதமர் மோடி?
– மணி ஷங்கர் ஐயர்,

(என்.டி.டி.வி வலைத்தளத்தில் எழுதியது)

More articles

1 COMMENT

Latest article