விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக அரசு பதவி ஏற்றது முதல், கடந்த 3 மாதமாக பரோலில் இருந்து வரும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முன்னதாக, சிறையில் இருந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. அன்றுமுதல் பேரறிவாளன் பரோலில், அவரது வீட்டில் இருந்து வருகிறார். அவருக்கு மேலும் 2முறை பரோல் நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அவரதுபரோல் ஆகஸ்டு 28ந்தேதி வரை உள்ளது.
இந்த நிலையில், சிறுநீரக தொற்று காரணமாக தற்போது விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]