சென்னை,

ரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள ரஜினிக்கு பிரபல தமிழ்பட இயக்குனர் கவுதமன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

புத்தாண்டு பரிசாக தமிழக மக்களுக்கு ரஜினியின் அரசியல் அறிவிப்பு ஒரு ‘துக்க செய்தி’ என்றும்,  ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறி உள்ளார்.

அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி போட்யிடப்போவதாக அறிவித்து உள்ளார். அவரது அறிவிப்புக்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு, நீட், காவிரி பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்ற மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடி வரும் பிரபல இயக்குனர் கவுதமன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது, நினைத்து பார்க்க முடியாத துயரமான மனோநிலையில்தான் இந்த ஆண்டு தொடங்கி உள்ளது.  50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இநத தமிழினம் இன்று சொல்ல முடியாத அளவுக்கு உரிமையை இழந்துள்ளது.

நீர், நிலம், ஆறு, வளம் ஆகிய மட்டுமல்லாமல் உயிரையும் உரிமையும் இழந்து வரும் நிலையில் மீனவர்கள், விவசாயிகள், மாணவர்களின் உரிமையை காப்பாற்ற எங்கே யாவது இருந்து ஒரு உண்மையான, தெளிவான பெரும் வெளிச்சம் தமிழ் இனத்தின் விடியலுக்கு ஏதாவது கிடைத்துவிடாதா என்று தேடி வருகிறோம்.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார்.

தமிழர்களின் உயிர், உரிமைகள் பறிக்கப்படும் போது என்றாவது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா?.  இந்த நிலையில் ஆன்மீக அரசியலை அவர் பிரகடனப்படுத்தி யுள்ளார்.  மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியுளளார். ரஜினிகாந்த் பாஜகவின் பின்புலத்தில்தான் இயங்குகிறார். ரஜினி எந்த தொகுதியில் போட்டி யிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நான் நிற்பேன்.

இவ்வாறு கவுதமன் கூறி உள்ளார்.