சென்னை
ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் என்னும் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விக்னேஷ் , லிவிங்ஸ்டன் , செந்தில் , ஜீவிதா , கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]