நீதிமன்றத்தில் ஆஜரானார் ரஜினி மகள் சவுந்தர்யா

Must read

சென்னை: விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள ரஜினி மகள் சவுந்தர்யா, இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் கணவருடன் சவுந்தர்யாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகவே விவாகரத்து முடிவு எடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரே தனது ட்விட்டர் பக்கத்தில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சவுந்தர்யா, அஸ்வின் இருவரும் ஆஜரானார்கள்.

More articles

Latest article