முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Must read

 

சென்னை

திமுக வெற்றி பெற்று வருவதையொட்டி மு க ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது.  ஒரு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.  இதையொட்டி மு க ஸ்டாலினுக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

அந்த செய்தியில்

“நடைபெற்றதமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு க ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்”

என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article