ஓசூர்:
ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் 2021ல் நிகழும் என்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ் தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கமல்-60 என்ற கமல்ஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கலந்து நடிகர் ரஜினிகாந்த், 2021-ம் ஆண்டு தமிழகத்தில் அதிசயம் நடக்கும் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வர் ஆவார் என கனவு கண்டிருப்பாரா என்று நக்கலாக கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலினைத் தவிர அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. தமிழக இந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும்போது, 2021-ல் அதிசயம் நடக்கும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது, சினிமா படத்தை பற்றி இருக்கும் என்று நக்கலாக பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், ரஜினிக்காக பல்வேறு பூஜை, புனஸ்காரங்கள், மற்றும் யாகங்களை தொடர்ந்து செய்துவரும் அவரது சகோதரர் சத்திய நாராயணராவ் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நடிகர் ரஜினி அடுத்த ஆண்டு கட்சி தொடங்கி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார், அதன்பிறகு 2021ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம், அற்புதம் நிகழும் என்று தெரிவித்தார்.