அமெரிக்கா-வில் புகழ் பெற்ற மார்வெல் சீரீஸ் திரைப்படமான மிஸ் மார்வெல் திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
ஆறு பாகங்களை கொண்ட இந்த வெப் சீரீஸில் இந்திய திரைப்படங்களில் இருந்து பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

அதில், ரஜினிகாந்த் நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘லிங்கா’ திரைப்படத்தில் இருந்து ‘ஓ நண்பா’ என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ளது.
இதற்காக ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து மற்றும் எஸ்.பி.பி. ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

மார்வெல் தொடரில் இந்திய பாடல்கள் பலவற்றை அதிலும் குறிப்பாக ரஜினி பட பாடலை பார்த்த ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கியதோடு வித்தியாசமான பெருமையை உணர்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel