சென்னை:
மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக தமிழகத்தில் செயலாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு இழப்பு ஏற்படும் என பிரபல வார பத்திரிகையான குமுதம் பொதுமக்களிடம் சர்வே எடுத்து வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்று 90 சதவிகிதம் பேர் தெரிவித்து உள்ளனர். இது அவரது ஆன்மிக அரசியல் அறிவிப்பு கிடைத்துள்ள சம்மட்டி அடியாக கருதப்படுகிறது.
நான் ஒருதடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என பாட்சா பட வசனத்தை போலவே தனது கருத்துக்களையும் மக்களிடையே கூறி வரும் ரஜினி, அதற்கு மக்களின் பிரதிபலிப்பு என்ன என்பதை அறிய மறந்து விட்டார். தனது அரசியல் நிலைப்பாட்டில் மட்டும் தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருவது மக்களின் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
துக்ளக்’ வைத்திருப்பவனே அறிவாளி! ரஜினிகாந்தின் ‘ஆன்மிக அரசியல்’ கண்டுபிடிப்பு
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தனது ரசிகர் மன்றத்தினர் உடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஒவ்வொரு வருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய். தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான் என்று கூறியவர் டிசம்பர் 31ந்தேதி அன்று தான் அரசியலுக்கு வருவேன் என்றும், தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக, அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, திரைப்படத்தில் நடிப்பதிலேயே கவனமாக செயல்பட்டு வந்தார் இடையிடையே பாஜக அரசின் நடவடிக்கை களை வரவேற்று கருத்து சொல்லிவிட்டு மீண்டும் பணம் சம்பாதிக்க சென்று விடுவார். தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்காத ரஜினி, கடந்த அண்டு செய்தியளார்களை சந்தித்தபோது, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவேன் என்று கூறினார். ஆனால், இதுவரை அரசியல் கட்சி தொடங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,மக்களை தொகை கண்கெடுப்பு போன்றவற்றை ஆதரிப்பதாகவும், சில அரசியல் கட்சிகள்தான் சிஏஏக்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் என்றும் கருத்து தெரிவித்தார்.
பாஜக கொண்டுவந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-க்கு ஆதரவு! ரஜினிகாந்த் ஓப்பன் டாக்
ரஜினியின் கருத்துக்கு தமிழகஅரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில், ரஜினி குறித்து பொதுமக்களின் கருத்து என்ன என்பது குறித்த குமுதம் வார இதழ் மக்களின் நாடியை பிடித்து பார்த்தது.
அதில், ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகமே என்று 90 சதவிகிதம் பேர் கருத்துக்கள் தெரிவித்து உள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 4 சதவிகிதம் மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 6 சதவிகிதம் பேர், அதுக்கு அவர் சரிபடமாட்டார் (அரசியலுக்கு வரமாட்டார்) என்று ஆணித்தரமாக தெரிவித்து உள்ளனர்.
அதுபோல,2021 தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு, 60 சதவிகிதம் பேர் தேர்தல் நேரத்தில்தான் முடிவெடுப்போம் என்றும், 20 சதவிகிதம் பேர் திமுகவுக்கும், 20 சதவிகிதம் பேர் அதிமுகவுக்கும் வாக்களிக்கப்போவதாக தெரிவித்து உள்ளனர்.
வார இதழின் இந்த சர்வே முடிவானது தமிழக மக்களிடையே ரஜினியின் தாக்கம் என்ன என்பதை வெளிக்கொண்டு வந்துள்ளது.
அரசியலுக்கு வருவதாக பலமுறை கூறிக்கொண்டே, அவ்வப்போது ஏதாவது கருத்து கூறி சர்ச்சைகளை உருவாக்கி, தன்மீது மக்களின் கவனம் திரும்பும் வகையில் செயல்படும் ரஜினி, தனது தள்ளாத வயதிலும் திரைப்படங்களில் நடித்து கல்லா கட்டி வருவதும் அனைவரும் அறிந்ததே… இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி அதுக்கு சரிப்பட மாட்டார் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…
சர்வே தகவல்: நன்றி குமுதம்