மும்பை: மும்பையில் காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, மருத்துவ பரிசோதனைக்காக இன்று இரவு அங்கிருந்து அமெரிக்கா புறப்பபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் ஆரம்பமானது. அந்த முதற்கட்ட படப்பிடிப்பில் பத்து நாட்கள் கலந்துகொண்ட ரஜினி, பிறகு சென்னை திரும்பினார். அப்போது தமிழக விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர், அரசியல் பார்வையாளர்கள் என பலரையும் சந்தித்து அரசியல் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் காலா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள மீண்டும் மும்பை சென்றார். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்வார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே மும்பையில் இருந்து இன்றிரவே ரஜினி அமெரிக்கா செல்கிறார். சில நாட்கள் அங்கு தங்கி மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு ஜூலை இரண்டாம் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ரஜினி ஏதும் அரசியல் ஆலோசனை நடத்துவாரா என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.