சென்னை:
டல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ னியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நலம் விசாரிக்க நடிகர் ரஜினி இன்று மருத்துவமனை வந்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை நலம் விசாரிக்க பல்வேறஉ அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.

அப்பல்லோ வந்த ரஜினி, ஐஸ்வர்யா
ப்பல்லோ வந்த ரஜினி, ஐஸ்வர்யா

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று வந்தார்.  அவருடன் மகள் ஐஸ்வர்யாவும்  வந்திருந்தார்.
இவர்களும் மற்றவர்களைப்போல முதல்வரை சந்திக்கவில்லை என்றும்,  மருத்துவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நலம் மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.