மும்பையை கலக்கிய டான் வேடத்தில் ரஜினி?

Must read

ஹாஜி – ரஜினி

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும்  இணைகிறார்கள். இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருக்கிறார்.

‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள்  வெளியாகி உள்ளன. மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகப்போகிறதாம்.

இவர் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு நிதி உதவி செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் திகழ்ந்தவர்.   தமிழ் மொழியை சரளமாக பேசக்கூடியவர்.

இவர் எப்போதும் வெள்ளை கலர் உடைகள், காலணிகள்தான் அணிவார். வெள்ளை நிற  மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பார். விலையுயர்ந்த சிகரெட்டுகளையே  புகைப்பார்.  . இதுவே இவரை மக்களிடையே ஸ்டைல் மன்னாக வலம் வர வைத்தது.

இவரது  வாழ்க்கைக் கதையைத்தான்  பா.ரஞ்சித் படமாக எடுக்கப்போவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

More articles

Latest article