கதாசிரியர் கலைஞானத்தின் 75 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையிலும், அவரது 90-வது பிறந்தநாள் பாரதிராஜா தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது .
அதில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நடிகர் சிவக்குமார், கதாசிரியர் கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தார். இதை தான் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார் .
அதற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சொந்த செலவில் வீடு வாங்கித் தருவதாக கூறினார்.
இந்நிலையில் தான் அறிவித்தபடி, சென்னை விருகம்பாக்கத்தில் 1320 சதுர அடியில் மூன்று படுக்கை அறை வசதிகள் கொண்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வீட்டை கலைஞானம் குடும்பத்தாருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.