விஜயவாடா

ந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையொட்டி அவர் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த சனிக்கிழமை, சுமார் ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். விஜயவாடா நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க  10-ந்தேதி உத்தரவிட்டது. அவர், கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் ராஜமுந்திரியில் (ராஜமகேந்திரவரம்) உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கான அச்சுறுத்தலைக் கருதி, தனியாக உள்ள ‘சினேகா’ என்ற பிளாக்கில் அவரை அடைத்தனர்.  நாயுடுவுக்கு ‘7691’ என்ற கைதி எண் ஒதுக்கப்பட்டுச் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவருக்கு ஒரு தனி உதவியாளரும், 5 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ள வீட்டு உணவும், மருந்துகளும் அளிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் நாரா லோகேஷிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். நாரா லேகேஷுக்கு தைரியமாக இருக்குமாறு ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்தார். சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார் என்றும் தன்னலமற்ற பொதுச்சேவை அவரை காப்பாற்றும் என்றும் நடிகர் ரஜினிகாந்த், நாரா லோகேஷிற்கு ஆறுதல் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.