தமிழகத்தில் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இரண்டு வார ஆன்மிக பயணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இமயமலை பயணம் மேற்கொண்ட அவர், இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட வடமாநிலங்களில் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்ய இருப்பதாகவும், அப்போது ஆன்மிக குருமார்களையும் சந்தித்து ஆசி பெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த 10ந்தேதி சென்னையில் இருநது புறப்பட்ட அவர் தற்போது ரிஷிகேஷில் உள்ளார். உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றார்.
அவரை மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரம நிர்வாகிகள் அவரை மடத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு ரஜினி தியாம் மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்.