ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி….!

Must read

மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி கட்சி வெற்றிக்கு , திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், “பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அவ்வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின், ரஜினியின் ட்வீட்டைக் குறிப்பிட்டு “தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article