மும்பை:
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மும்பைக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேவி முக்கிய பிரமுகர் என்பதால் விரிவான பிரேத பரிசோதனை நடக்கிறது என்று துபாய் தடயவியல் துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு இருப்பதால் நடைமுறைகள் விரைந்து முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீதேவியில் உடலுக்கு மும்பை ஜூஹூ என்ற இடத்தில் இறுதி சடங்குகள் நடக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இறுதி சடங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் மும்பை செல்கிறார் என்று அவரது செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel