சென்னை:

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘செய்தித் தாள்கள் மூலமும், சுவரொட்டி விளம்பரம் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், என்னை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.