சென்னை,

மிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்து திரையுலகை சேர்ந்தவர்களின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜஎஸ்டி 28 சதவிகித வரியை தொடர்ந்து தமிழக அரசும் 30 சதவிகித கேளிக்கை வரி விதித்துள்ளது. இதன் காரணமாக திரையரங்குகளில் சினிமா டிக்கெடுகளின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி இன்று 3 வது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வெளிநாடு சென்றிருந்த ரஜினி தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில், லட்சக்கணக்கான திரையுலகினரின் வாழ்க்கையைக் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில்,  ‘தமிழ் சினிமா துறையை நம்பியுள்ள லட்ச கணக்கவர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன், என வேண்டுகோள் விடுத்துள்ளார்.