2 ஜி வழக்கு: 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு! ஓ.பி.சைனி அறிவிப்பு

டில்லி,

2ஜி அலைக்கற்றை வழக்கில் வரும் ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். 8 ஆண்டுகளைக நடைபெற்ற இந்த வழக்கில் வரும் ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்து உள்ளார்.

கடந்த மே மாதத்துடன் வாதங்கள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 25ந்தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும், அன்று வழங்கப்படவில்லை என்றால், மேலும் 15 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி உள்ளார்.

 

கடந்த 2007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அலைகற்றை ஓதுக்கீடு காரணமாக, அரசுக்கு  1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி  தெரிவித்தது.  அதைத்தொடர்ந்து கடந்த  2009-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் காரணமாக திமுகவை சேர்ந்த அமைச்சர் ஆ.ராசா  பதவியில் இருந்து விலகினார்.

கடந்த 8 ஆண்டுகளுகாக நடைபெற்ற வரும்  இவ்வழக்கில், இருதரப்பு சாட்சியமும் முடிவடைந்த நிலையில், இறுதி வாதமும் நேற்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் முடிவடைந்தது.

இறுதி வாதத்தை சிபிஐ நீதிமன்ற  நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பதிவு செய்தார். அப்போது, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே என வாதிட்டார்.

இவ்வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் வழக்கின் தீர்ப்பு  எப்போது வெளி யாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ தனிநீதி மன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

திமுகவினர் பரபரப்பாக எதிர்பார்க்கும் இந்த தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வருமா? அல்லது எதிர்ப்பாக வருமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீ‘ட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.


English Summary
2G case: 8 years after the verdict in August! Judge Judge O P Saini announcement