சென்னை:

த்தியஅரசின் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மூலம், நடிகர் ரஜினிகாந்த், தன்னை
தமிழர்களின் விரோதியாக அடையாளப்படுத்திக் கொண்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக தெரிவித்து உள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்சிஆர் , என்பிஆர் சட்டங்களுக்கு  ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், சிஏஏக்கு எதிரான போராட்டங்களை சில கட்சிகள் தூண்டி வருவதாகவும் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது குற்றம் சாட்டினார்.

ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக, காங்கிரஸ்  உள்பட பல கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியளார்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பொத்தாம் பொதுவாக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக கருத்து கூறும் ரஜினிகாந்த் குறித்து தமிழக மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாகவும்,  ரஜினிகாந்த் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது, தமிழர்களின் விரோதியாக ரஜினி தன்னை காட்டிக்கொண்டுள்ளார் என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், ரஜினிகாந்தை நடிகராக பார்த்த தமிழக மக்கள் தற்போது, பாஜகவின் ஊதுகுழலாக பார்க்கிறார்கள் என்று கூறியவர், இலங்கை செல்ல விரும்பாத இலங்கை அதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க ரஜினி மத்திய அரசிடம் குரல் கொடுப்பாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.