ராகவா லாரன்ஸ் நடித்த “மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தை ரஜினி பார்த்து பாராட்டியதா அந்தப் படத்தின் இயக்குநர்  சாய் ரமணி தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸுடன், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா உட்பட பலர் நடித்துள்ளனர்.   அம்ரிஷ் இசையமைத்துள்ளார். சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

படத்தின் இயக்குனர் சாய்ரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரான லாரன்ஸை வைத்து படம் இயக்க வாய்ப்பு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  அறியாமல் நடந்துவிட்ட “மக்கள்  சூப்பர் ஸ்டார்” டைட்டில் பிரச்சனையால்  மிகவும் கவலைப் பட்டிருந்தேன்.

ரஜினியுடன் “மொட்ட சிவா” டீம்..

இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார், மொட்டசிவா படத்தை  வெளியான இரண்டாம் நாளே பார்த்துவிட்டு எங்களை அழைத்தார். அவரை சந்தித்தபோது, . “லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டாரர் என்று அடைமொழி வைத்தது  உங்கள் ரசிகர்களின் மனதை புண் படுத்திவிட்டது. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.  தப்போது சில திரையரங்குளில் மக்கள் சூப்பர் ஸ்டார் கார்டு எடுக்கப் பட்டுவிட்டது. மற்ற திரையரங்குகளிலும் எடுத்து கொண்டே  வருகிறோம்:  என்று எனது  விளக்கத்தை தெரிவித்தேன்.

ரஜினி,  என்னையும் மொட்டசிவா படத்தையும் மனதார  பாராட்டினார். எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்ததும்  எனது  வாழ் நாளில் மறக்கவே முடியாத ஒன்று” என்று இயக்குனர் சாய்ரமணி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.