சென்னை:

றைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்  உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அன்பழகன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1 மணி அளவில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர்  முக ஸ்டாலின் உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பல கட்சிகளின் தலைவர்களும் அன்பழகன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த   க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் இயக்குநர்  எஸ்.பி. முத்துராமன் உடனிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அன்பழகன் மறைவு பேரிழப்பு. 60 ஆண்டுகால  அரசியல் வாழ்க்கையில்  பேராசிரியர் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும் தான். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் க. அன்பழகன் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.