தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினார். அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கட்சியினர் எவரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்தது.
இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அவரை ஸ்டாலின் , கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். பிறகு கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் ரஜினி.
“கருணாநிதி முழு ஓய்வில் இருக்கிறார் என்பதால் அவரைய யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இறந்து சில நாட்களே ஆகியுள்ள சூழலில் நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரம், ரஜினி தரப்பு வட்டாரங்கள், “அரசியலில் அனைவருமே ரஜினிக்கு நண்பர்கள்தான். கருணாநிதியை அவர் சந்தித்து நலம் விசாரிக்க மட்டுமே” என்று தெரிவிக்கிறார்கள்.