10-rajini-kamal-vijay-ajith-su
நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை  இன்று பதிவு செய்தனர்.
234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற  232 தொகுதிகளுக்கும் இன்று  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.    மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறும்.

ரஜினி
ரஜினி

காலை 7 மணிக்கு  வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள்  வாக்குகளைப் பதிய வாக்குச்சாவடியில் குழுமி வருகிறார்கள். திரைப்பட நட்சத்திரங்களும் ஆர்வத்துடன் காலையிலேயே வந்து வாக்களிக்கதனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குசாவடியில் பதிவு செய்தார். அப்போது, பத்திரிகையாளர்,  புகைப்படக்காரர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அஜித்
அஜித்

நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். உடன் அவரது துணைவியார்  நடிகை கவுதமியும் தனது வாக்கை பதிவு செய்தார்.
 
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

 
 
நடிகர் உதயநிதி ஸ்டாலின்,  தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காலை 8.30 மணிக்கே வந்து வாக்கு பதிவு செய்தார்.  அவர் தனது தந்தையும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின். தாயார் துர்கா, மற்றும் தனது மனைவியுடன் வந்திருந்தார்.
 
விவேக்
விவேக்

திருவான்மியூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் வந்தார். இருவரும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.   அதே போல நடிகர்கள் சிவகார்த்திகேயன், விவேக் ஆகியோரும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.
நடிகர் விஜய் இன்னமும் தனது வாக்கை பதிவு செய்யவில்லை. நடிகர் சூர்யா, தான் வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன் என்று ஏற்கெனவே கூறிவிட்டார்.