இமயமலைக்குப் புறப்பட்ட ரஜினியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கேட்கப்பட, பதில் சொல்லாமல் சென்றுவிட்டார். இது தமிழக விவசாயிகளிடைய பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனை தொடர்புகொண்டு பேசினோம்.
கொட்டித்தீர்த்துவிட்டார் மனிதர்:
“இத்தனை வருடங்களாக மக்களைக் கெடுக்கும் படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி, இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அப்படியானால் தமிழக பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டுமா இல்லையா?
”காவிரி மேலாண்மை வாரியம் குறித்து இப்போது பேச வேண்டாம்” என்கிறார் இப்போது பேச வேண்டாம் என்றால் பிறகு எப்போது பேசுவது? தமிழக விவசாயிகள், தமிழகம் எல்லாம் அழிந்த பிறகு பேசுவதா?
அரசியலில் இருக்க உனக்கு (ரஜினி) என்ன யோக்கியதை இருக்கிறது? அரசியலில் மட்டுமல்ல.. தமிழகத்தில் இருக்கவ தகுதி அற்ற நபர் இந்த ரஜினி” என்று ஆவேசமாக பேசினார் பி.ஆர். பாண்டியன்.
அவரிடம் மேலும் சில கேள்விகளை வைத்தோம்:
“சிஸ்டம் சரியில்லை.. சரியானால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற அர்த்தத்தில் ரஜினி பேசிவருகிறாரே?”
“முதலில் அவர் தனது குடும்பத்தின் சிஸ்டத்தை சரி செய்யட்டும். அவரது மனைவி லதா, நடத்தும் பள்ளிக்கு செயல்படும் இடத்துக்கு வாடகை தரவில்லை.. பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை, சென்னை மாநகராட்சி கடையை வாடகைக்கு எடுத்து அதற்கு வாடகை தரவில்லை, வாங்கிய கடனைத் திருப்பித்தரவில்லை. இதற்காக பணத்தைத் திருப்பித்தரச் சொல்லி உச்ச நீதிமன்றம், லதாரஜினியின் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் இவர் நாட்டின் சிஸ்டத்தை சரி செய்யப்போகிறாரா.. ரஜினி ஒரு அயோக்கிய பேர்வழி!”
“எம்.ஜி.ஆர். ஆட்சியை அளிப்பேன் என்கிறாரே ரஜினி..?”
”எம்.ஜி.ஆருக்கு என்று குடும்பம் இல்லை. மக்களுக்காகவே வாழ்ந்தார். தனது சொத்துக்களில் பெரும்பாலானவற்றை பொதுமக்கள் நலனுக்காக எழுதி வைத்தார். முற்றும் துறந்த முனிவர் போல் எம்.ஜி.ஆர். வாழ்ந்தார். அவரது பெயரைச் சொல்லக்கூட ரஜினிக்கு அருகதை கிடையாது. “
“ஆனால், ரஜினிக்கு பின்னும் கூட்டம் இருக்கிறது. ஆகவே அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வருவார் என்று ஒரு அனுமானம் இருக்கிறதே..!”
“அது தவறான அனுமானம். திரையுலகைப் பொறுத்தவரை சிவாஜியைவிட வரலாற்று நாயகன் வேறு ஒருவர் கிடையாது. அவரது நடிப்பு என்பது இந்திய தமிழக கலாச்சாரதோடு இணைந்தது. அவருக்கு இல்லாத ரசிகர் கூட்டமா? அவகுத்து இஸ்ஸாச அறிவாற்றலா?
ஆனால் அவர் அரசியலுக்கு வந்தபோது, சொந்த மாவட்டத்திலயே டெபாசிட் போய்விட்டது.
ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அரசியலுக்கு வருவதற்கு முன் ஒருவர் மீது இருக்கும் எதிர்பார்ப்பு வேறு. வந்த பிறகு மக்கள் அவர்களை பார்க்கும் விதம் வேறு. நான்கூட இன்று பல போராட்டங்களை நடத்துகிறன். மக்கள் வருகிறார்கள்.
ஆனால் அரசியல் என்று தேர்தலில் நின்றால் தோல்விதான் கிடைக்கும். அதே போலத்தான் ரஜினி நிலையும் ஆகும்.
தவிர நானாவது மக்களுக்காக போராடுகிறேன். தேர்தல் அரசியலுக்கு போனால் எனக்கே அந்தக் கதிதான் ஏற்படும் என்றால், ரஜினியோ ஒரு மோசடிப்பேர்வழி அவரை நிச்சயமாக மக்கள் ஏற்கமாட்டார்கள்!”
“ரஜினி குறித்து இவ்வளவு ஆவேசமாக பேசுகிறீர்கள். ஆனால் கமலின் கட்சி துவக்க விழாவில் கலந்தகொண்டீர்கள..!”
“ காவிரி – விவசாயிகள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசுகிறார் கமல். எச்.ராஜா, பெரியார் சிலை குறித்து பிரச்சினையை கிளப்பியதே காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை மறைக்கத்தான் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்துகிற, விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிறுத்துகிற கட்சி எதுவானாலும் அதன் கூட்டங்களில் கலந்துகொள்வன். பாஜக அப்படி நடத்தினால் அதிலும் கலந்துகொள்வேன். இன்றுகூட பாமக, விவசாயிகளைக் கூட்டி ஈரோட்டில் கூட்டம் நடத்துகிறது. அதில் பங்குபெறத்தான் வந்திருக்கிறேன்.
மற்றபடி நான் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவன்.”
– டி.வி.எஸ். சோமு