சென்னை,
ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்த்து நேற்று சென்னையில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது ரஜினி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த வாரம் ரசிகர்களுடனான ரஜினி சந்திப்பின்போது, அரசியல் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஒருசில தலைவர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி ஆகியோர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி ரசிகர்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர் முனேற்றப்படை அமைப்பினருக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் பொது ரஜினிக்கு எதிராக பேசிய சீமான், விரலட்சுமின் உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.