ரஜினி பட ரிலீசை திரையரங்கில் திருமணம் செய்து  கொண்டாடிய ரசிகர்

சென்னை

சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினியின் பேட்ட படத்தை பார்க்க வந்த ரசிகர் அங்கேயே திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

இன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் ஆகிய இருபடங்கள் வெளியாகி உள்ளன.   இரு திரைப்படங்களையும் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.   ரஜினிகாந்தின் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜும் அஜித்குமாரின் விஸ்வாசம் படத்தை சிவாவும் இயக்கி உள்ளனர்.

நகரெங்கும் பல திரையரங்குகளில் வெளியாகி உள்ள இந்த இரு படங்களையும் காண வந்த ரசிகர்கள் கரகாட்டம் தப்பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.   இந்த படத்தை நேரில் கண்டு ரசிகர்களின் விருப்பத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா காசி தியேட்டருக்கு வந்தனர்.

சென்னை உட்லன்ட்ஸ் தியேட்டரில் வெளியாகி உள்ள பேட்ட படத்தை காண வந்த ரஜினி ரசிகர் அன்பரசு தனது மூன்று வருட காதலியான காமாட்சியை தியேட்டரிலேயே திருமணம் செய்துக் கொண்டாடினர்.    அத்துடன் தஞ்சாவூரிலும் ஒரு ரசிகர் திருமணம் செய்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் திருமணம் செய்துக் கொண்ட அன்பரசு, “நாங்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.   எங்கள் வீடுகளில் திருமணம் செய்ய வசதி இல்லாததால் நான்க்கல் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியிடம் தெரிவித்தோம்.   எங்கள் திருமணத்தை அவர் இன்று திரையரங்கிலேயே நடத்தி வைத்தார்.” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: marriage in theatre, petta film, Rajinikanth, ரசிகர் திருமணம், ரஜினிகாந்த்
-=-