சேலம்:
னது பிறந்தநாள் அன்று நடிகர் ரஜினி, அரசியல் அறிவிப்பை வெளியிடாததால் ஏமாற்ற மடைந்த ரசிகர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவார், தனிக்கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழக முதல்வர் ஆகிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளாக இருந்து வருகிறது.

ரஜினி

ஆனால் அவ்வப்போது, அரசியல் குறித்து பட்டும்படாமல் பேசி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரஜினி, தொடர்ந்து திரைத்துரையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்ற ஆதங்கம் அவர்களது ரசிகர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்கலைச் சந்திக்கும் நிகழ்ச்சியை நடிகர் ரஜினி நடத்தினார்.

அப்போது, போர் வரும் என்றெல்லாம் அவர் பேச, அரசியலுக்கு வருவதைத்தான் அப்படிச் சொல்கிறார் என்று ரசிகர்கள் வழக்கம்போல எதிர்பார்த்தனர். டிசம்பர் 12ம் தேதி அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் அன்று ரஜினி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் ரசிகர்கள் விரக்திக்குள்ளாகினர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் அழகாபுரம் பாறைவட்டம் பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான ஏழுமலை நேற்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏழுமலை, “தனது பிறந்தநாள் அன்று அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்த்தோம். பல வருடங்களாக எதிர்பார்த்து நடக்காமல் போனது இப்போது நடந்துவிடும் என்று நினைத்தோம். இப்போதும் ரஜினி ஏமாற்றிவிட்டார். ஆகவே மனம் வெறுத்து பூச்சி மருந்து குடித்தேன் என்று தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

42 வயதாகும் ஏழுமலை, “நாட்டுக்கொரு நல்லவன்” ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்.
சேலம் அரசு மருத்தவமனை