தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஆன்மீக பயணமாக நடிகர் ரஜினி காந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் .

பாபாஜி குகையில் நேற்று தியானம் செய்தார். தனது 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று சென்னை திரும்புகிறார். இந்த முறை தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை யும் உடன் அழைத்துச் சென்றார்.

மஹா அவதார் பாபாஜியின் குகை, உத்தராகண்ட் மாநிலம் துனாகிரி பகுதியில் உள்ளது. பாபாஜியை ரஜினி தனது மானசீக குருவாக கருதுவதால், ஒவ்வொரு முறை இமயமலை செல்லும்போதும், இந்த குகைக்கு சென்று தியானம் செய்வது வழக்கம். பாபாஜி குகைக்கு சென்று வரும் பக்தர்களின் வசதிக்காக, அருகே உள்ள துவாராஹாட் என்ற இடத்தில் ‘குரு சரண்’ என்ற பெயரில் ரஜினி ஓர் ஆசிரமமும் கட்டியுள்ளார்.