ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றார் ரஜினி . அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் சென்றிருந்தார்.

6 நாள் இமயமலைப் பயணத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 18 இரவு சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ரஜினி, காரில் ஏறி வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது அவருடைய காரைத் துரத்திக் கொண்டே ரசிகர்கள் சிலர் சென்றுள்ளனர்.

இரவு 12:30 மணியளவில் போயஸ் கார்டன் வீட்டை அடைந்துள்ளார் ரஜினி . அப்போது பின்னால் வந்த ரசிகர்களை வீட்டிற்குள் அழைத்துள்ளார். அனைவரிடமும் வாழ்க்கை ரொம்ப முக்கியம், இப்படியெல்லாம் துரத்திக் கொண்டே வரக் கூடாது என கூறியுள்ளார். பின்பு அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

[youtube-feed feed=1]