சென்னை:
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 23 வருடங்களாக நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன்; இரவு 10 மணிக்கு மேல் மாணவிகள், முதியவர்கள் மற்றும் பெண்களுக்கும் இலவச சவாரி வழங்குகிறேன்; அவசர காலங்களில் மருத்துவமனைக்கு இலவச சவாரிகளையும் வழங்குகிறேன்,” என்று தெரிவித்தார்.