ராஜஸ்தான்:
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1174 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானின் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தல் 2021-இன் முடிவுகளின்படி காங்கிரசும் பாஜகவும் நெருக்கமான மோதலில் ஈடுபட்டுள்ளன. ராஜஸ்தானின் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அஜ்மீர், பன்ஸ்வாரா, பிகானேர், பில்வாரா, பூண்டி, பிரதாப்கர், சிட்டோர்கர், சுரு, துங்கர்பூர், ஹனுமன்கர், ஜெய்சால்மர், ஜலூர், ஜலவர், ஜுன்ஜுன், நாகவுர், ராஜூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இன்றைய மாலை 4.20 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 1,174 வார்டுகளையும், பாஜக 1,123 வார்டுகளையும் வென்றுள்ளது. 615 வார்டுகளை சுயேச்சைகள் வென்றனர்; தேசியவாத காங்கிரஸ் 46 வார்டுகளையும், ஆர்எல்பி 13 வார்டுகளையும், சிபிஐ (எம்) 3 மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி 1 வார்டையும் வென்றது.
மொத்தமுள்ள 3,035 வார்டு கவுன்சிலர்கள் தேர்தலில், இதுவரை 2,975 வார்டு கவுன்சிலர்களின் முடிவுகள் வெளிவந்துள்ளன. வார்டுகளுக்கான முடிவுகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.