ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ள நகராட்சிகள் தேர்தலில் காங்கிரஸ் 1198 வார்டுகளை கைப்பற்றி பாஜகவை பின்னுக்குத் தள்ளி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வியாழன் அன்று 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புக்களுக்குத் தேர்தல் நடந்தது.  மொத்தம் 3035 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தற்போது இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி முடிவுகள் பின் வருமாறு ;

மொத்த வார்டுகள் : 3035

முடிவு அறிவிக்கப்பட்ட வார்டுகள் : 3035

காங்கிரஸ் : 1198

பாஜக : 1140

ஆர் எல் பி : 13

தேசிய வாத காங்கிரஸ் : 46

சிபிஎம் : 3

பகுஜன் சமாஜ் : 1

மற்றவை : 634

இதில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.  பாஜகவை விட 58 இடங்கள் அதிகம் வென்றுள்ளது.

வாக்கு விகிதம்

காங்கிரஸ் : 34.36%

பாஜக : 33.49%

ஆர் எல் பி : 0.58%

தேசியவாத காங்கிரஸ் : 1.26%

சி பி எம் : 0.23%

பகுஜன் சமாஜ் : 0.13%

சுயேச்சைகள் : 29.23%

நோடா : 0.73%