இதனால் மாநில காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருபுறமும், பாஜக தலைவர்கள் மற்றொருபுறமும் சச்சினை வளைக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ராகுல் காந்தியும் சச்சினை சந்தித்து பேசினார். இதனால் சமாதானம் அடைந்த சச்சின் மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற முடிவு செய்து, நேற்று மாநில முதல்வர் கெலாட்டை சந்தித்து பேசி சமரசம் ஆனார்.
இந்த நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில், அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்ட மிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.