பரபரப்பான சூழலில் ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூடுகிறது…

Must read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக  கடுமையான அரசியல் சுழல் சுழன்றடித்து ஓய்ந்துள்ள நிலையில், இன்று மாநில சட்டமன்ற கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சி யான  பாஜக சார்பில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸின் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, அரசு அரசின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியானது. மாநில  முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட அதிகார மோதலால் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன்  போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டு, அவரது துணைமுதல்வர் பதவியும் பிடுங்கப்பட்டது.

இதனால் மாநில காங்கிரஸ் அரசு கவிழும் சூழல்  ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருபுறமும், பாஜக தலைவர்கள் மற்றொருபுறமும் சச்சினை வளைக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ராகுல் காந்தியும் சச்சினை சந்தித்து பேசினார். இதனால் சமாதானம் அடைந்த சச்சின்  மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற முடிவு செய்து, நேற்று மாநில முதல்வர் கெலாட்டை சந்தித்து பேசி சமரசம் ஆனார்.

இந்த நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில்,  அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்ட மிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article