ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சருக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

Must read

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார். இது குறித்து அவர் அதில் கூறி இருப்பதாவது:

ரகு சர்மா ஜி விரைவில் பூரண நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன்.  அவருடன் சமீபத்தில் தொடர்பு கொண்டவர்கள் தங்களை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதியான பின்னர் தமது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ரகு சர்மா, கொரோனா ஆரம்ப அறிகுறிகள் இருந்ததும், தம்மை சோதனைக்கு உட்படுத்தியதாக கூறி உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே சில நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தயவு செய்து உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் தொகுதியான, கேக்ரிக்கு சென்றார். அங்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு, அது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

More articles

Latest article