
மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான லீக் போட்டியை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது ராஜஸ்தான் அணி.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில், 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர், எளிய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது ராஜஸ்தான் அணி.
துவக்க வீரர்களில் ஒருவரான ஜெய்ஸ்வால் 22 ரன்களை அடித்தாலும், ஷிவம் துபேவும் அதேயளவு ரன்களை சேர்த்து அணிக்கு கைகொடுத்தாலும், கேப்டன் சஞ்சு சாம்சன், இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை உறுதிசெய்தார்.
ராகுல் டெவாஷியா 5 ரன்களில் அவுட்டாக, டேவிட் மில்லர், 24 ரன்களை சேர்த்து, நாட்அவுட்டாக இருந்தார். இதன்மூலம், அந்த அணி, 18.5 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகளில் வென்றது.
[youtube-feed feed=1]