துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தனது 3வது வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில், கேப்டன் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 48 ரன்களை அடித்தார். இதில் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகள் அடக்கம். மணிஷ் பாண்டே 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களை அடித்தார்.
கேன் வில்லியம்சன் 12 பந்துகளில் 22 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை சேர்த்தது ஐதராபாத் அணி.
பின்னர், எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் சோபிக்கவில்லை. ஜோஸ் பட்லர் 16 ரன்களை மட்டுமே அடித்தார். சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 26 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
அதேசமயம், ரியான் பராக்கும் ராகுல் டெவாஷியாவும் ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர்.
ரியான் 26 பந்துகளில் 42 ரன்களையும், ராகுல் 28 பந்துகளில் 45 ரன்களையும் அடித்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகளில் வென்றது ராஜஸ்தான் அணி.