டில்லி

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்  அசோக் கெலாட் பாஜகவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வரும் 22 ஆம் தேதி அன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச மாநில அரசு செய்து வருகிறது. நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விரைவில் விழாவில் கலந்து கொள்வது குறித்து முடிவு செய்வோம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம்,

“அனைவருக்கும் கடவுள் ராமர் உரியவர். நாம் அனைவருமே ராம பக்தர்கள்தான். மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில், ராமர் கோவில் திறப்பு விழா பாஜக நடத்தும் நிகழ்வு போல் காட்டப்படுகிறது”

என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.