இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, தமிழர் ஒருவரை நீதிபதியாக நியமிப்பதா என்று ஆவேத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் பணியாற்றிய வழக்கறிஞராக ராமநாதன் என்ற தமிழரை, மேல் நீதிமனஅற நீதயபதியாக இலங்கை அரசு நியமித்தது.
இந்த நடவடிக்கையை இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கடுமையாக கண்டித்துள்ளார்.
“கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கிய ஒரு அரசியல் கட்சியை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

இதன் மூலம் பதவி உயர்வுகளை எதிர்பார்த்திருக்கும் கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றங்களின் சுயசார்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நியமனத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ரத்து செய்ய வேண்டும்” என்று ராஜபக்ஷ வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நிராகரித்துளளார். அவர், “இலங்கை வழக்கறிஞர்களின் சங்கத்தின் வேண்டுகோள் மற்றும் தலைமை நீதிபதியின் சிபாரிசின்படிதான் இந்த நியமனம் நடந்துள்ளது. சட்டப்படி இது சரியான நடவடிக்கைதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.