சென்னை:

திமுகவுக்கு அதிகாரம் மிக்க ஒரே தலைமைதான் வேண்டும், இரட்டை தலைமை தேவையி ல்லை என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்போ இன்று செய்தியாளர்களிடம் கூறிய நிலை யில், அதுகுறித்து பதில் அளிக்க   துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மறுத்து விட்டார்.

மதுரை மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தனது மகன் சத்யன் தோல்வி அடைந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை வடக்கு தொகுதி அதிமுக  எம்எல்ஏ ராஜன் செல்லப்பா,  அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை என்றும் அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் தற்போது இல்லை என்றும் ஆளுமை மிக்க தலைமையை உருவாக்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.

மேலும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா கூறியிருந்தார்.  இது அதிமுகவில் சர்ச்சையை எழுப்பிய நிலையில், செய்தியாளர்கள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ராஜன் செல்லப்பாவின்  பேட்டியை முழுமையாக பார்த்துவிட்டு கருத்து கூறுவதாக  சொல்விட்டு எஸ்கேப்பானார்.